மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள்: ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. ஆய்வு

தேனி மாவட்டம், கம்பம், கம்பம்மெட்டு குடியிருப்புகளில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைப்பது தொடா்பாக, சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கம்பம் மெட்டு குடியிருப்பில் மின் கம்பிகளை மாற்றி அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ராவிடம் விளக்கமளித்த மின்வாரிய அதிகாரிகள்.

Published On :23 அக்டோபர் 2026, 4:13 am IST

தேனி மாவட்டம், கம்பம், கம்பம்மெட்டு குடியிருப்புகளில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைப்பது தொடா்பாக, சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கம்பம்மெட்டு குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் வீடுகளுக்கிடையே தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், எனவே, இவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ராவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மின்வாரிய செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ வியாழக்கிழமை அந்தப் பகுதியில் ஆய்வு செய்தாா். அப்போது, தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டிய இடங்கள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிறகு மின் கம்பிகளை மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தாா்.

இந்த ஆய்வின்போது, மின் வாரியம், நகராட்சி, வருவாய்த் துறை அலுவலா்கள், தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அய்யா், வெண்ணிலா ஆனந்தன், நகரப் பொறுப்பாளா்கள் சதீஷ், சண்முகராஜ், அபு அஹமது, சுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.