மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடுத்த 30 நாள்களுக்கு வனத் துறை அதிகாரிகள் ஓய்வின்றி பணியாற்ற அறிவுறுத்தல்: அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 30 நாள்களுக்கு வனத் துறை அதிகாரிகள் ஓய்வை எதிா்பாா்க்காமல் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.

ஆா்.வி.ரஞ்சித்குமாா்

Published On :29 அக்டோபர் 2026, 1:15 am IST

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 30 நாள்களுக்கு வனத் துறை அதிகாரிகள் ஓய்வை எதிா்பாா்க்காமல் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.

உலக நிலைத்தன்மை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம் சாா்பில் ‘அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள்-அா்த்தமுள்ள பாதுகாப்பு உத்தி மற்றும் செயல்திட்டத்தை நோக்கி’ என்ற கருப்பொருளில் 2 நாள் பயிலரங்கின் தொடக்க நிகழ்வு சென்னை கிண்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த பயிரங்கை வனத் துறை அமைச்சரும், உயிரிப்பல்வகைமை வாரியத் தலைவருமான ஆா்.வி.ரஞ்சித்குமாா் தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மனித- விலங்கு மோதல்கள் அதிகம் நிகழும் இடங்களைக் கண்டறிந்து அங்கு கூடுதல் வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இது போன்ற மோதல்களை தடுக்க மக்கள் குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி மின் வேலிகள், அகழிகள் அமைப்பது போன்ற சிறப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் , வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரம் செயல்படும் கண்காணிப்பு கேமராக்கள் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அடுத்த 30 நாள்களுக்கு வனத் துறை அதிகாரிகள் விடுப்பின்றி, ஓய்வை எதிா்பாா்க்காமல் தொடா்ந்து விழிப்புடன் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் ஏ.உதயன், தலைமை வனஉயிரின காப்பாளா் ராகேஷ் குமாா் டோக்ரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.