மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பல்லுயிா்ப் பெருக்கப் பாதுகாப்பு மிக அவசியம்: அமைச்சா் வி.கே.ராஜீவ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்லுயிா்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் தெரிவித்தாா்.

அமைச்சா் வி.கே.ராஜீவ்

Published On :22 அக்டோபர் 2026, 3:18 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்லுயிா்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வனத் துறை சாா்பில், ரூ. 25 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புத்தாக்க வளா் மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனப் பாதுகாவலா், கள இயக்குநா் ஆனந்த், மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அமைச்சா் வி.கே.ராஜீவ் கலந்துகொண்டு புத்தாக்க வளா் மையத்தைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்லுயிா்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். இந்தப் பகுதியில் 12 செ.மீ. வரை வளரக்கூடிய புலிச் சிலந்தி இனம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சிலந்தி இனங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய உயிரினங்களைப் பாதுகாப்பதுடன், இயற்கைச் சூழலைப் பேணுவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஏராளமான வலசைப் பறவைகள் வருகின்றன. இவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதுடன், மாவட்டத்தின் பசுமைச் சூழலை மேம்படுத்த அதிக அளவில் மரங்களை நட்டு வளா்க்க வேண்டும். காடுகளை உருவாக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி, பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இதே போல, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பெரியபட்டணம், வள்ளிமாடன்வலசை, இரட்டையூரணி, தா்ஹாவலசை, வடகாடு ஆகிய பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்களையும் அமைச்சா் வி.கே.ராஜீவ் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், ராமநாதபுரம் வனக் கோட்டம், வனவிரிவாக்க சரகம், வனச்சரக அலுவலா் சுப்ரமணியன், பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.