கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒர்னாப் புயல்: ஆந்திரம் - தமிழகம் இடையேயான ரயில்கள் ரத்து!

ஒர்னாப் புயல் காரணமாக ஆந்திரம் - தமிழகம் இடையேயான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி...

Cyclone Arnab: train cancellations between Andhra Pradesh and Tamil Nadu

ரயில் - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 12:40 pm IST

ஒர்னாப் புயல் காரணமாக ஆந்திரம் - தமிழகம் இடையேயான இரு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான 'ஒர்னாப்' புயல், ஆந்திரத்தில் நர்சாபூர் - காக்கிநாடா இடையே ஏனாம் அருகே இன்று (அக். 28) காலை கரையைக் கடந்தது. முன்னதாக ஆந்திரத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதையடுத்து ஆந்திரத்தில் இருந்து விமான சேவைகள் ரத்தான நிலையில் ஆந்திரம் - தமிழகம் இடையேயான சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுபற்றி வெளியிட்டுள்ள தகவலில்,

"ஒர்னாப் புயல் காரணமாக ரயில் எண் 06020 – நர்சாபூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில், ரயில் எண் 17291 – நர்சாபூர் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் ஆகிய இரண்டு ரயிகளும் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

ரயில் எண் 06019 – தூத்துக்குடி – நர்சாபூர் சிறப்பு ரயில், பீமாவரம் டவுன் நிலையம் வரை மட்டுமே செல்லும். பீமாவரம் டவுன் - நர்சாபூர் இடையேயேயான சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

பயணிகள் இதைக் கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Cyclone Arnab: Train cancellations between Andhra Pradesh and Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.