தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒர்னாப் புயல்: ஆந்திரம், ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்!

ஆந்திரம், ஒடிசா மாநில கடற்கரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறித்து...

ornab

ஒர்னாப் புயல்: ஆந்திரம், ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்! - படம்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Published On :27 அக்டோபர் 2026, 12:00 pm IST

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், திங்கள்கிழமை ஒர்னாப் புயலாக வலுப்பெற்ற நிலையில், ஆந்திரம், ஒடிசா மாநில கடற்கரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒர்னாப் புயல் வலுப்பெற்று, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 27) மிக தீவிர புயலாகவும் அதே பகுதிகளில் வலுப்பெறக்கூடும்.

இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, ஒர்னாப் புயல், விசாகப்பட்டினத்துக்க்கு தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவுக்கு கிழக்கு - தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், கோபால்பூருக்கு தெற்கே 380 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவுக்கு கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், மற்றும் ஸ்ரீ விஜய புரம் பகுதிக்கு மேற்கு - வடமேற்கே 980 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக புதன்கிழமை (அக். 28) முற்பகலுக்குள் கரையைக் கடக்கக்கூடும்.

அப்போது, மணிக்கு 140 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், ஆந்திரம், ஒடிசா மாநில கடற்கரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஒர்னாய் புயலின் நிலை, விசாகப்பட்டினத்தில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார் (Doppler Weather Radar) மூலம், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Summary

A deep depression over the Bay of Bengal intensified into Cyclone 'Ornap' on Monday, prompting the issuance of a 'red alert' for the coastal regions of Andhra Pradesh and Odisha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.