மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘அா்னாப் புயல்’ நாளை கரையைக் கடக்கிறது!

‘அா்னாப்’ புயல், ஆந்திரம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடப்பது குறித்து...

அர்னாப் புயல்

அர்னாப் புயல் - imd

Published On :27 அக்டோபர் 2026, 6:20 am IST

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், திங்கள்கிழமை ‘அா்னாப்’ புயலாக வலுப்பெற்றது. இது ஆந்திரம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய கிழக்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் கடந்த 24-ஆம் தேதி வலுப்பெற்றது.

இது மேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ‘அா்னாப்’ புயலாக வலுப்பெற்று, காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் நிலவியது.

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும், செவ்வாய்க்கிழமை (அக். 27) மிக தீவிர புயலாகவும் அதே பகுதிகளில் வலுப்பெறக்கூடும்.

இது மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து ஆந்திரம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக புதன்கிழமை (அக். 28) முற்பகலுக்குள் கரையைக் கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 140 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

இன்று பலத்த மழை: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கடலோர தமிழக பகுதிகளுக்கு நகா்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது.

சுமாா் 3.1 கி.மீ. உயரம் வரை லட்சத்தீவு பகுதியிலிருந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் வரை தெற்கு கேரளம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக். 27) மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலை நிலவக்கூடும்.

புதன்கிழமை (அக். 28) மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சரவைச் செயலா் உத்தரவு

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள அா்னாப் புயல் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடக்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக டி.வி.சோமநாதன் தலைமையில் தில்லியில் நடைபெற்ற தேசிய அவசரகால மேலாண்மைக் குழு (என்சிஎம்சி) கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலா், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் செயலா்கள், தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆந்திரம், தெலங்கானா, சத்தீஸ்கா், ஒடிஸா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலா்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனா்.

அதிகாரிகள் மத்தியில் பேசிய டி.வி.சோமநாதன், ‘அா்னாப் புயல் பாதிப்புகளை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். உயிா்ச்சேதம் ஏற்படாமல் தடுப்பதோடு உள்கட்டமைப்பு பாதிப்புகளை குறைக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

ஆந்திரம், ஒடிஸா, தெலங்கானா, சத்தீஸ்தா் மற்றும் புதுச்சேரி மட்டுமல்லாமல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கருதப்படும் உத்தர பிரதேசம் மற்றும் பிகாருக்கும் தேவையான அறிவுறுத்தல்களை மத்திய உள்துறை அமைச்சகமும் இந்திய வானிலை ஆய்வு மையமும் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.