ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது!

ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது பற்றி...

Arnab cyclone

ஒர்னாப் புயல் வலுவிழக்க தொடங்கியது - IMD

Published On :28 அக்டோபர் 2026, 11:02 am IST

நர்சாபூர் - காக்கிநாடா இடையே ஏனாம் அருகே அதி தீவிர புயலாக ’ஒர்னாப்’ முழுமையாக கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான ஒர்னாப் புயல் கணிக்கப்பட்டதை விட முன்கூட்டியே செவ்வாய்க்கிழமை இரவு ஆந்திர மாநிலம் நர்சாபூர் - காக்கிநாடா இடையே உள்ள ஏனாம் (புதுச்சேரி நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதி) அருகே அதி தீவிர புயலாக கரையைக் கடக்கத் தொடங்கியது.

புயல் கரையைக் கடக்கத் தொடங்கியவுடன் ஆந்திரம், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் இரவு விடியவிடிய பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில், ஒர்னாப் அதி தீவிரப் புயலாக முழுமையாக கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், ஒர்னாப் புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 125 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும், தற்போது தீவிரப் புயலாக வலுவிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடல் சீற்றம்

ஒர்னாப் புயல் நேற்றிரவு கரையைக் கடக்கத் தொடங்கியபோது, சென்னை எண்ணூர், மெரினா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து, கடல் அலைகள் கடற்கரைச் சாலையைத் தாண்டி வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் கடல் அலைகளின் தாக்கத்தால் கவிழ்ந்தது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணூர் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

Summary

Cyclone arnab has completely landfall and has begun to weaken

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.