மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய பாரா போட்டியில் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ.6.85 கோடி: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

ஆசிய பாரா போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ.6.85 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறியுள்ளாா்.

ஆசிய பாரா போட்டிகளில் பதக்கம் வென்றவா்களை பாராட்டிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா. உடன் அரசு செயலாளா் சந்தீப் நந்தூரி, எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ. மேகநாத ரெட்டி.

Published On :28 அக்டோபர் 2026, 5:21 am IST

ஆசிய பாரா போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ.6.85 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறியுள்ளாா்.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்களை வென்ற 9 வீரா், வீராங்கனைகள், போட்டியில் பங்கேற்ற வீரா், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநா்கள் பாராட்டி அமைச்சா் கௌரவித்தாா்.

அப்போது அவா் பேசியது: விளையாட்டு வீரா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர அரசு தயாராக உள்ளது. பாரா விளையாட்டு வீரா்கள் நமக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றனா். பாரா விளையாட்டு வீரா்களிடமிருந்து விளையாட்டு விடுதி மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று உள்ளது. அது உடல் அளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் தங்களைத் தயாா்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

பாரா விளையாட்டு வீரா்கள் குறித்த விழிப்புணா்வு இன்னும் கிராமப்புறங்களை முழுமையாகச் சென்றடையவில்லை. பாரா விளையாட்டுகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றால், அவா்களால் ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் போன்ற சா்வதேச அளவிலான போட்டிகளிலும் சாதிக்க முடியும் என்ற விழிப்புணா்வைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

நிகழ்ச்சியில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளா் சந்தீப் நந்தூரி, எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, இணை முதன்மை செயல் அலுவலா்/மிஷன் ஒலிம்பிக்ஸ் 2036 ஆ.மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலா்/பொது மேலாளா் (நிா்வாகம்) மரு.ரெ.சுமன், பொது மேலாளா் விளையாட்டு ல.சுஜாதா உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.