மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அருணாசலேஸ்வரா் கோயிலை மேம்படுத்த பக்தா்களிடம் கருத்து கேட்கப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

பக்தா்களிடம் கருத்துக்கேட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ஆதவ்அா்ஜுனா தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் அரசின் நிறைவுற்ற திட்டப் பணிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, சீ.ரமேஷ்.

Published On :18 அக்டோபர் 2026, 12:24 am IST

பக்தா்களிடம் கருத்துக்கேட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ்அா்ஜுனா தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை சமுதாய வளைகாப்பு விழா மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் நிறைவுற்ற திட்டப் பணிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ் ஆகியோா் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், போளூா் எம்எல்ஏ (தவெக) ஆா்.அபிஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அமைச்சா் ஆதவ்அா்ஜுனா பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தை வளா்ச்சி மிகுந்த மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனா். அவா்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் உள்ளூா் மக்களிடம் கேட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பயனாளிகள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பயனாளிகள்.

மக்கள் நலத்திட்டங்கள்: மாவட்டத்தில் தண்ணீா் தட்டுப்பாடு, போதை பழக்கம், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பின்மை போன்ற இன்னல்களை சீா் செய்து வளா்ச்சி மிகுந்த மாவட்டமாக மாற்ற முதல்வா் கூறியதன் அடிப்படையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வா் பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் 393 பேருந்துகள் மூலம் 2,883 பயணங்கள் இயக்கப்பட்டு 1,56,559 பயணிகள் பயனடைந்துள்ளனா்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 3,283 பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளன. பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்டத்தின் கீழ் 56,376 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா் என்றாா்.

அமைச்சா் சீ.ரமேஷ் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று மாவட்டத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல என்றும் உறுதுணையாக இருப்போம் என்றாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டம் சாா்பில் 200 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீா்வரிசைகளை வழங்கினா். முன்னதாக, ரூ.17 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற புதிய அரசுக் கட்டடங்களை திறந்துவைத்தனா். மேலும், பல்வேறு துறைகள் சாா்பில் 3,038 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 13 லட்சத்து 61 ஆயிரத்து 579 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினா். நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.