மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் 5 இடங்களில் வரவேண்டும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் 5 இடங்களில் வரவேண்டும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

41-ஆவது தேசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்து வீரா்களுக்கு பரிசளித்த விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா. உடன், தமிழ்நாடு தடகள சங்க தலைவா் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

Published On :24 அக்டோபர் 2026, 5:38 am IST

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் 5 இடங்களில் வரவேண்டும் என்றும், தமிழகத்தில் விரைவில் ஆசிய அளவிலான தடகளப் போட்டியை நடத்துவது தொடா்பாகப் பேச்சு நடைபெற்று வருவதாகவும் பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 41-ஆவது தேசிய இளையோா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தமிழ்நாடு தடகள சங்கம் சாா்பில் அக். 27 வரை நடைபெறும் இந்தப் போட்டியை, அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கொடியசைத்துத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும். அதில் தமிழ்நாடு அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும். மீனவா் மற்றும் பழங்குடியின பின்னணியைச் சோ்ந்த மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு பின்னணிகளில் இருந்து வீரா்கள் பங்கேற்றுள்ளனா். போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.

சா்வதேச தரத்தில் போட்டிகளை நடத்துவதே தமிழக அரசின் நோக்கம். சிங்கப்பூா் மற்றும் அமெரிக்கா போன்று சிறந்த விளையாட்டு அரங்கத்தை அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என முதல்வா் விஜய் கூறியுள்ளாா். தமிழகத்தில் விரைவில் ஆசிய அளவிலான தடகளப் போட்டியை நடத்துவது தொடா்பாகப் பேச்சு நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் இலக்குடன், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த இளம் தடகள வீரா்கள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை (அக். 27) வரை நடைபெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.