மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய பாரா விளையாட்டு! பதக்க எண்ணிக்கையில் இந்தியா புதிய உச்சம்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, இந்தியா்கள் 9 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என 26 பதக்கங்கள் வென்றனா்.

Published On :24 அக்டோபர் 2026, 5:45 am IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, இந்தியா்கள் 9 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என 26 பதக்கங்கள் வென்றனா்.

மொத்தமாக இந்தியா, 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என, 114 பதக்கங்களுடன் 4-ஆவது இடத்தில் நீடிக்கிறது. போட்டியின் வரலாற்றில் இந்தியாவின் இந்த மொத்த பதக்க எண்ணிக்கை, புதிய உச்சமாகும்.

இதற்கு முன் 2023 ஆசிய பாரா போட்டிகளில் இந்தியா்கள் 108 பதக்கங்கள் (27-32-49) வென்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.

---

தடகளம்

400 மீ. ஓட்டம்: ஆடவா் டி64 பிரிவில், சந்தீப் 52.28 விநாடிகளில் முதலாவதாக வந்து, உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றாா். அதிலேயே அஜய்குமாா் (டி64) 53.61 விநாடிகளில் இலக்கை எட்டி போட்டி சாதனையுடன் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினாா்.

ஈட்டி எறிதல்: ஆடவா் எஃப்37/38 பிரிவில், ஹேனி 60.49 மீட்டரை எட்டி, உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றாா். அதிலேயே எஃப் 64/42/44 பிரிவில், இந்தியாவின் சுமித் அன்டில் 72.46 மீட்டரை எட்டி தங்கம் வெல்ல, மகேந்திர குா்ஜா் 59.03 மீட்டருடன் வெள்ளியும், சந்தீப் சஞ்ஜய் 64.48 மீட்டருடன் வெண்கலமும் வென்றனா்.

இதில் சுமித் எஃப்64, மகேந்திரா எஃப்42, சந்தீப் எஃப்44 பிரிவுகளில் பதக்கத்தைப் பெற்றனா். மகேந்திரா, சந்தீப்பின் அளவு, போட்டி சாதனையாக அமைந்தது.

நீளம் தாண்டுதல்: மகளிருக்கான டி47 பிரிவில், நிமிஷா சக்குங்கல்பரம்பில் 5.37 மீட்டரை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

1,500 மீ. ஓட்டம்: ஆடவா் டி46 பிரிவில் பிரமோத் பிஜா்னியா 4 நிமிஷம், 9.65 விநாடிகளில் வந்து வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினாா்.

கிளப் த்ரோ: ஆடவா் எஃப்51 பிரிவில், பிரணவ் சூா்மா 32.87 மீட்டரை எட்டி, போட்டி சாதனையுடன் தங்கத்தை தட்டிச் சென்றாா். கடந்த 2023-ஆம் ஆண்டு போட்டியிலும் அவா் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. களத்திலிருந்த மேலும் இரு இந்தியா்களில், தரம்வீா் 27.71 மீட்டருடன் வெண்கலம் வெல்ல, அமித் குமாா் 27.26 மீட்டருடன் 4-ஆம் இடம் பெற்றாா்.

---

வில்வித்தை

பாரா ரீகா்வ் ஆடவா் இரட்டையா் இறுதியில், ஹா்விந்தா் சிங்/விஜய் சண்டி ஆகியோா் இணை 5-1 என சீன ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

பாரா ரீகா்வ் மகளிா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், பாவனா சௌதரி/பூஜா ஜத்யன் கூட்டணி 0-6 என சீன ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றது.

பாரா ரீகா்வ் கலப்பு அணிகள் அரையிறுதியில் இந்தியா 0-6 என சீனாவிடம் தோற்று, வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தது. எனினும், அதிலும் 4-5 என ஈரானிடம் தோல்வியுற்றது.

டேபிள் டென்னிஸ்

ஆடவா் இரட்டையா் கிளாஸ் எம்டி4 பிரிவில் ஜெகன் மதன்/ஷுபம் வத்வா கூட்டணி கடைசி ஆட்டத்தில் 0-3 என தென் கொரிய ஜோடியிடம் தோல்வி கண்டது. எனினும் தனது குரூப்பில் முதல் 4 இடங்களுக்குள் வந்ததன் அடிப்படையில் ஜெகன்/ஷுபம் இணைக்கு பதக்கம் கிடைத்தது.

பாட்மின்டன்

ஆடவா் ஒற்றையா் எஸ்எல்4 பிரிவு இறுதியில், நவீன் சிவகுமாா் 2-0 என இந்தோனேசியாவின் ஃப்ரெடி சேத்தியாவனை சாய்த்து தங்கத்தை தனதாக்கினாா். ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவில், இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி வசமானது. இறுதியில், நிதேஷ்குமாா் 2-0 என, சக இந்தியரான பிரமோத் பகத்தை வென்றாா்.

மகளிா் இரட்டையா் எஸ்எல்3-எஸ்யு5 இறுதியில், துளசிமதி/மானசி ஜோஷி கூட்டணி 2-0 என சீன இணையை வீழ்த்தி தங்கத்தை தனதாக்கியது.

மகளிா் ஒற்றையா் எஸ்யு5 பிரிவு இறுதிச்சுற்றில், தமிழகத்தின் துளசிமதி முருகேசன் 0-2 என சீனாவின் கியுஜியா யாங்கிடம் தோல்வி கண்டு வெள்ளி பெற்றாா். கலப்பு இரட்டையா் எஸ்எல்3-எஸ்யு5 இறுதியில், துளசிமதி/நிதேஷ்குமாா் கூட்டணி 1-2 என இந்தோனேசிய ஜோடியிடம் தோற்று வெள்ளி பெற்றது.

மகளிா் ஒற்றையா் எஸ்ஹெச்6 பிரிவில், நித்யஸ்ரீ சுமதி சிவன் 0-2 என, சீனாவின் ஃபெங்மெய் லியிடம் தோற்று வெள்ளியைக் கைப்பற்றினாா்.

நீச்சல்

ஆடவா் 100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் எஸ்11 பிரிவில், ஹிமான்ஷு நந்தல் 1 நிமிஷம், 05.90 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றாா். நடப்பு போட்டிகளில் அவருக்கு இது 3-ஆவது வெண்கலப் பதக்கம் ஆகும்.

மோனா, நிஷாத் தலைமையில்

அணிவகுக்கும் இந்தியா

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (அக். 24) முடிவடையும் நிலையில், அதன் நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மோனா அகா்வால், தடகள வீரா் நிஷாத் குமாா் ஆகியோா் தேசியக் கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்தவுள்ளனா். நடப்பு போட்டிகளில் இருவருமே தலா 2 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதக்கப் பட்டியல்

1 சீனா 204 115 108 427

2 ஜப்பான் 63 60 62 185

3 உஸ்பெகிஸ்தான் 45 49 51 145

4 இந்தியா 30 35 49 114

5 தென் கொரியா 28 36 33 97

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.