கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் பிடிபட்டனர்.

பிடிபட்ட கைதிகள்

Published On :27 அக்டோபர் 2026, 7:18 pm IST

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் பிடிபட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் ஒரே அறையில் இருந்த 17 கைதிகள் காவலர்களை அடித்துவிட்டு திங்கள்கிழமை இரவு தப்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வரும் நிலையில், 4 கைதிகளை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். ஆட்டோவில் தப்பிக்க முயன்ற மாற்றுதிறனாளி கைதி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் காவலர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தேனிக்கு வந்த சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் மேலும் 8 பேர் பிடிபட்டுள்ளனர். மலைப்பகுதியில் பதுங்கியிருந்தவர்களை டிரோன் மூலம் ஆய்வு செய்து காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

தப்பியோடிய 17 பேரில் தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதி 4 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Summary

Eight more of the 17 prisoners who escaped from the Theni jail have been captured.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.