பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள்: 4 பேரை பிடித்த காவல் துறை!

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகளில் 4 பேரை பிடித்த காவல் துறை.

jail

சிறை - பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 8:33 am IST

தேனி மாவட்ட சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில், 4 பேரை காவல் துறை பிடித்துள்ளது.

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை உள்ளது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு, 17 கைதிகள் தப்பியோடினர். தாக்குதலில் சிறையின் இரண்டாம் நிலைக் காவலர் தங்கப்பாண்டி பலத்த காயமடைந்தார்.

அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். மேலும், இரு காவலர்கள் லேசான காயமடைந்தனர்.

இதுகுறித்து, சிறைக் காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தப்பியோடிய கைதிகளைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்தடுத்து 4 பேரை காவல் துறையினர் பிடித்துள்ளனர். தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகளை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Summary

Of the 17 prisoners who escaped from the Theni District Prison, 4 have been apprehended by the police.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.