தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி சிறையில் தப்பிய மேலும் ஒருவர் கைது; பிடித்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

தேனி மாவட்டச் சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளது பற்றி...

Another person who escaped from Theni prison has been arrested

தேனி சிறையில் தப்பிய மேலும் ஒருவர் கைது... - கோப்புப்படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:36 pm IST

தேனி மாவட்டச் சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறையில் 200 பேர் இருக்க வசதி உள்ள நிலையில் 334 கைதிகள் அடைப்பட்டிருந்தனர். அங்கு ஒரு சிறையில் 17 பேர் இருந்த நிலையில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறவே, சிறைக் காவலர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அறையில் இருந்த கைதிகள், காவலர்களைத் திடீரென தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பினர். இரண்டு காவலர்கள் காயமடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

17 கைதிகள் தப்பியோடிய நிலையில் இன்று காலை வரை 4 பேர் பிடிபட்டனர். இதையடுத்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளியான லிங்கபிரசாத் என்பவர் தப்பியோடி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு, ஆட்டோ ஓட்டுநர் முத்துக்காளை என்பவரின் ஆட்டோவில் ஏறி கண்டமனூர் விலக்கில் இறக்கிவிடச் சொல்லியுள்ளார்.

ஆட்டோ போய்க்கொண்டிருக்கும்போது இடையே சோதனையில் ஈடுபட்ட காவலர் ஒருவர், சந்தேகத்தின்பேரில் ஆட்டோவின் பின்னால் பைக்கில் வந்து கைதியை பிடிக்க முற்பட்டுள்ளார். காவலரின் சத்தம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவை நிறுத்தி கைதியை கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டார். பின்னர் அவர் தப்பியோடிய கைதி என்பதை உறுதி செய்த காவலர், கைதியை சிறை வாசலில் கொண்டு வந்துவிட சொன்னதன்பேரில் ஆட்டோ ஓட்டுநர் கொண்டுவந்து ஒப்படைத்திருக்கிறார்.

தற்போது 5 பேர் பிடிபட்டுள்ள நிலையில் எஞ்சிய 12 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தேனி மாவட்ட சிறையில் ஆய்வு செய்து வருகிறார். இந்த விவகாரத்தில் சிறைக் காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Summary

Another person who escaped from Theni prison has been arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.