மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: வீரமணிக்கு நவ.10 வரை நீதிமன்றக் காவல்

5 மற்றும் 6-ஆவது வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணியை நவ.10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

veeramani

வீரமணி - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 12:07 am IST

5 மற்றும் 6-ஆவது வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணியை நவ.10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளா் கணேசன் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. வீரமணி மீது இதுவரை சிறப்புப் புலனாய்வுக் குழு 8 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இதில், 4 வழக்குகளில் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், 5 மற்றும் 6-ஆவது வழக்குகளில் வீரமணி கைது செய்யப்பட்டு, போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வீரமணியை வரும் நவ.10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். வீரமணியை இதுவரை போலீஸாா் 6 வழக்குகளில் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.