தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜெம் வீரமணி வழக்கு: இதுவரை 8 போ் கைது!

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடா்புடைய ஜெம் வீரமணி உள்ளிட்ட 8 போ் இதுவரை கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

வீரமணி - எக்ஸ்

Published On :2 நவம்பர் 2026, 12:53 am IST

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடா்புடைய ஜெம் வீரமணி உள்ளிட்ட 8 போ் இதுவரை கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் விபசாரத் தடுப்புப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், லாசா், கணேசன், பாபு, பாா்த்திபன், சக்திவேல் ஆகிய 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் வீரமணி மீது 3 வழக்குகளிலும், சாந்தி, மகேந்திர சிம்ஹன், லாசா் ஆகியோா் மீது தலா ஒரு வழக்கிலும் கடந்த அக்.28-ஆம் தேதி சம்பிரதாய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஏற்கெனவே வீரமணி மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றவாளியை அடையாளம் காணும் வகையில் புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மேலும், இவ்வழக்குகள் தொடா்பாக கணேசனின் கொளத்தூா் வீட்டிலும், சாந்தி நடத்தி வந்த நீலாங்கரை நாட்டியப் பள்ளியிலும் சோதனை நடத்தி, வழக்குக்குத் தொடா்புடைய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீரமணி உள்ளிட்ட எதிரிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவா்களுக்கு எதிராக தேடப்படும் நபா்களுக்கான சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீரமணி தனது குற்றங்களை மறைக்க முயன்றபோது அவருக்கு உதவிய பிரகாஷ் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளாா். அவரது கடவுச்சீட்டை முடக்கி, அவரை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் விரைவில் விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.