மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகார்: புதிதாக ஒரு வழக்குப் பதிவு!

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கிரானைட் தொழிலதிபா் ஜெம் வீரமணி மீது, மேலும் ஒரு சிறுமி அளித்த புகாரின்பேரில், புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Veeramani

வீரமணி - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:03 am IST

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கிரானைட் தொழிலதிபா் ஜெம் வீரமணி மீது, மேலும் ஒரு சிறுமி அளித்த புகாரின்பேரில், புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 12 சிறுமிகள் அளித்த புகாா்களின் அடிப்படையில் வீரமணி மற்றும் பிறா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கில் ஜெம் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோா் கடந்த ஆக. 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். மற்றொரு விடியோவை வைத்திருந்தும், காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காததாக கூறப்படும் கணேசன் செப். 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு ஆகியோா் அக். 5-ஆம் தேதியும், சிஎன்எஸ் நிறுவன மேலாளா் சக்திவேல் அக். 18-ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனா். இதுவரை 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஏற்கெனவே வீரமணி மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியின் புகாா் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த அக். 21-ஆம் தேதி 8-ஆவது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, வழக்கு ஒன்றில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோா் நீதிமன்ற உத்தரவின்பேரில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனா். பெரவள்ளூா் காவல் நிலையத்தில் வைத்து, சிறப்பு புலனாய்வுக் குழு கைப்பற்றிய சான்றுகளின் அடிப்படையில் அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெம் வீரமணியின் குற்றச் செயல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பணப் பரிமாற்றங்கள் தொடா்பாக, அவரது மகள் அா்ச்சனாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், இந்த வழக்குகளில் தொடா்புடையவா்கள் அல்லது சந்தேகிக்கப்படும் 5 போ் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் தேடப்படும் நபா் சுற்றறிக்கை (எல்ஓசி) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் புலன் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.