மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

புதிதாக பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் ஜெம் வீரமணிக்கு நீதிமன்றக் காவல்.

ஜெம் வீரமணி

ஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்! - படம்: தினமணி

Published On :8 அக்டோபர் 2026, 3:26 am IST

ஜெம் கிரானைட் உரிமையாளா் வீரமணியை அக். 21-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட் உரிமையாளா் வீரமணி கடந்த ஆக. 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஏராளமான சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலைத் தொடா்ந்து, ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டாா்.

இதுவரை ஜெம் வீரமணிக்கு எதிராக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஒரு வழக்கில் அவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் நடந்த சம்பவம் தொடா்பான போக்ஸோ வழக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வீரமணி கைது செய்துபட்டுள்ளாா்.

இதற்காக, புழல் சிறையில் இருந்து புதன்கிழமை வீரமணி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டாா்.

போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன்பு போலீஸாா் வீரமணியை ஆஜா்படுத்தினா். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, வீரமணியை வரும் அக். 21-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து வீரமணியை போலீஸாா் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

Summary

Gem Veeramani, arrested in a newly registered POCSO case, has been remanded to judicial custody until October 21.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.