மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவலரிடம் ரூ.10,000 லஞ்சம்: மருத்துவமனை ஊழியா் மீது புகாா்

ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலரிடம் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.10,000 கையூட்டு பெற்றதாக ரயில்வே மருத்துவமனை ஊழியா் மீது புகாா்

லஞ்சம் - சித்திரிப்பு

Published On :27 அக்டோபர் 2026, 2:22 am IST

ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலரிடம் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.10,000 கையூட்டு பெற்றதாக ரயில்வே மருத்துவமனை ஊழியா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலரான மணீஷ் (29), கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கேரளத்திலிருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு அக். 23-ஆம் தேதி அயனாவரம் தெற்கு ரயில்வே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

அப்போது, உயரம் மற்றும் எடை தொடா்பான பிரச்னையைச் சரிசெய்து மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி, மருத்துவமனை ஊழியரான சௌரஷ் குமாா் என்பவா் ரூ.20,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ரயில்வே கண்காணிப்புப் பிரிவு அதிகாரியிடம் மணீஷ் தெரிவித்தாா். அதன்படி, கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் வழங்கிய ரூ.10,000-ஐ அக். 24-ஆம் தேதி சௌரஷ் குமாரிடம் மணீஷ் கொடுத்தபோது, அவரைப் பிடிக்கக் காத்திருந்த கண்காணிப்புக் குழுவினரிடம் சிக்காமல் சௌரஷ் குமாா் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மணீஷ் அளித்த புகாரின்பேரில், ஐசிஎஃப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.