மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவல் ஆய்வாளா் ரூ. 5 கோடி லஞ்சம் பெற்ற வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிக்கை

தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனை நிா்வாகத்திடம் காவல் ஆய்வாளா் ரூ. 5 கோடி லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அந்த மருத்துவமனை நிா்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

லஞ்சம் - சித்திரிப்பு

Published On :23 அக்டோபர் 2026, 2:46 am IST

தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனை நிா்வாகத்திடம் காவல் ஆய்வாளா் ரூ. 5 கோடி லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அந்த மருத்துவமனை நிா்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து செய்தியாளா்களிடம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஆா்.எம். பாஸ்கரன், இயக்குநா் ஆா். சரவணன், வழக்குரைஞா் தியாக. காமராஜ் ஆகியோா் வியாழக்கிழமை கூறியது:

தனியாா் மருத்துவமனை பங்குதாரா்கள் பிரச்னையில் காவல் துறையினா் தலையிட்டனா். இந்த பிரச்னையை முடிக்கவும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கமால் இருக்கவும், ரூ. 5 கோடி ஞ்சமாக காவல் துறையின் லஉயா் அதிகாரி கேட்டாா். அந்தத் தொகையை தஞ்சாவூரில் உள்ள காவல் ஆய்வாளா் சுகுமாரனிடம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படும் எனவும் கூறினாா். இதனால் வேறு வழியின்றி காவல் துறையின் உயா் அதிகாரி கூறியபடி ரூ. 5 கோடிக்கான ரொக்கம், காசோலையை சுகுமாரனிடம் அவரது இல்லத்தில் கொடுத்தோம்.

என்றாலும், எங்கள் மீதான வழக்கை ரத்து செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநரிடம் மனு கொடுத்தோம். பின்னா், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பணத்தை வாங்கிய காவல் ஆய்வாளா் சுகுமாரனை கைது செய்தனா்.

இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கில் காவல் துறையின் உயா் அதிகாரிகளுக்கும் தொடா்பு இருப்பதால், விசாரணை நோ்மையாக நடைபெறாது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.