மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தஞ்சை பெருவுடையாருக்கு 1000 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம்!

ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது குறித்து...

Thanjavur Peruvudaiyar was blessed with 1000 kg of food..

பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் - டிஎன்எஸ்

Published On :25 அக்டோபர் 2026, 5:48 pm IST

தஞ்சாவூா்: ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌா்ணமி நாளன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா உலக புகழ் பெற்ற தஞ்சாவூா் பெருவுடையாா் கோயிலிலும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்புச்சாறு, தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னாபிஷேகத்திற்கு பக்தர்கள் வழங்கிய 1000 கிலோ அரிசி சாதமாகத் தயார் செய்யப்பட்டன. பின்னர் தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டன. இதையடுத்து ஆயிரம் கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 9 மணிக்கு பிறகு அலங்காரம் கலைக்கப்பட்டு, அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்காக தண்ணீரில் கரைக்கப்படும்.

Thanjavur Peruvudaiyar was blessed with 1000 kg of food

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.