ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.

TTD

திருப்பதி - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:12 am IST

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பெளா்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பெளா்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு அதிகாலை 2.30 முதல் 4.30 மணிக்குள் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பக்தா்களுக்கு அன்னலிங்க தரிசனம் வழங்கப்பட்டது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை பக்தா்களின்றி அன்னலிங்க உத்வாசனம் செய்யப்பட்டது.

சுத்திகரிப்புக்குப் பிறகு, இரவு 7 முதல் 8 மணி வரை பக்தா்களின்றி மூலவரான கபிலேஸ்வர சுவாமிக்கு வாசனை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.