மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆம்பூர் அருகே பாலாற்றில் மீண்டும் பொங்கி வழியும் ரசாயன நுரை: தொடர் மழையைப் பயன்படுத்தி ஆலைகள் அட்டூழியம்!

ஆம்பூர் அருகே பாலாற்றில் மீண்டும் பொங்கி வழியும் நச்சு ரசாயன நுரை பற்றி...

Chemical foam overflows once again in Palar river near Ambur

பாலாற்றில் பொங்கி வழியும் நச்சு ரசாயன நுரை.

Published On :25 அக்டோபர் 2026, 12:55 pm IST

ஆம்பூர் அருகே பாலாற்றில் மீண்டும் பொங்கி வழியும் நச்சு ரசாயன நுரையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையைப் பயன்படுத்தி, வாணியம்பாடியில் இயங்கி வரும் சில தோல் தொழிற்சாலைகள் தங்களின் சுத்திகரிக்கப்படாத நச்சு ரசாயனக் கழிவுநீரைப் பாலாற்றில் நேரடியாகத் திறந்துவிட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக, ஆம்பூரை அடுத்த மாராப்பட்டு பாலாற்றுத் தரைப்பாலத்தில், ஆற்று நீரே கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு வெள்ளை நிற ரசாயன நுரை பல அடி உயரத்திற்கு மலை போல் பொங்கி வழிகிறது. பாலத்தின் அடியில் இருந்து கொட்டும் தண்ணீர் முழுவதும் வெள்ளைப் பஞ்சுப் பொதிகள் போலவும், பனிப்பாறைகள் போலவும் குவிந்து கிடப்பது அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தரைப்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சத்துடன் நின்று இந்த அவலத்தைப் பார்த்துச் செல்கின்றனர். மேலும், காற்றில் பறக்கும் நச்சு நுரையின் துகள்களால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் மற்றும் தோல் ஒவ்வாமை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த ரசாயன நச்சு நீர் ஆற்றுப்படுகை வழியே சென்று நிலத்தடி நீரில் கலப்பதால், விவசாயக் கிணறுகள் மற்றும் குடிநீர் ஆழ்துளைக் கிணறுகள் பாழாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரங்களில் அதிகாரிகளின் கண்காணிப்பு குறைவாக இருப்பதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தொழிற்சாலைகள் கழிவுநீரை ஆற்றில் கலப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதனால் பாலாற்றின் சுற்றுச்சூழல் முற்றிலும் சீரழிந்து வருகிறது.

எனவே, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக ஆய்வு செய்து, பாலாற்றில் ரசாயனக் கழிவுகளை வெளியேற்றிய தொழிற்சாலைகளைக் கண்டறிந்து சீல் வைக்க வேண்டும் எனவும், அவர்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாலாற்றுப் பாசன விவசாயிகளும் பொதுமக்களும் ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Summary

Great tension prevails in the area as toxic chemical foam froths and overflows once again in the Palar River near Ambur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.