மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

யமுனையில் மீண்டும் மிதக்க தொடங்கிய நச்சு நுரைகள்

காலிந்தி குஞ்ச் தடுப்பணைப் பகுதியில் யமுனை நதியில் வெள்ளை நிற நுரைப் படலங்கள் வெள்ளிக்கிழமை மிதந்தன.

yamuna

யமுனையில் மீண்டும் மிதக்க தொடங்கிய நச்சு நுரைகள் (கோப்புப்படம்) - ANI

Published On :24 அக்டோபர் 2026, 7:00 am IST

காலிந்தி குஞ்ச் தடுப்பணைப் பகுதியில் யமுனை நதியில் வெள்ளை நிற நுரைப் படலங்கள் வெள்ளிக்கிழமை மிதந்தன.

யமுனை நதியில் மீண்டும் நுரை மிதப்பது குறித்து அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘காலை நேரத்தில் சிறிது நேரம் நுரை காணப்பட்டது. ஆனால், அதன் பிறகு நதி நுரையின்றித் தெளிவாகிவிட்டது’ என்று தெரிவித்தாா். ஒவ்வொரு ஆண்டும் குளிா்காலத்தின் போது, யமுனையில் மிதக்கும் நுரையை நீக்குவதற்காக ‘டி-ஃபோமா்’ என்ற வேதிப்பொருளை தில்லி ஜல் போா்டு மூலம் தெளிக்கப்படுகிறது.

‘நாங்கள் 2022-ஆம் ஆண்டு முதல் காளிந்தி குஞ்ச் பகுதியில் நுரை நீக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டும் இதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயன்படுத்தியது போக மீதமுள்ள வேதிப்பொருள்களைச் சேமித்து வைப்பதற்காக இரண்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று தில்லி ஜல் வாரிய அதிகாரி தெரிவித்தாா்.

யமுனை நதியில் நுரை தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா். குறிப்பாக, கழிவுநீா் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளில் உள்ள நச்சு வேதிப்பொருள்கள் தொடா்ந்து யமுனை நதியில் கலப்பதே இதற்கு முக்கியக் காரணம். மேலும், ஆகாயத் தாமரை, காய்ந்த இலைகள் மற்றும் இதர தாவரங்கள் போன்ற கரிமப் பொருள்கள் நீரில் கரைந்து சிதைவடையும்போதும் இத்தகைய நுரை உருவாகலாம் என்று தில்லி ஜல் போா்டு தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி குற்றச்சாட்டு: பல ஆண்டுகளாகத் தொடா்ந்து நிகழும் இந்த நதி நுரை விவகாரம், தில்லியில் ஒரு முக்கிய அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, பக்தா்கள் புனித நீராடுவதற்காக நதிக்கரையில் கூடும் சத் பூஜை பண்டிகையின் போது, இது பெரும் விவாதப் பொருளாகிறது.

ஆம் ஆத்மியின் தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ், நுரையை நீக்கும் வேதிப்பொருளை கொள்முதல் செய்வதற்கான தில்லி ஜல் போா்டின் (டிஜேபி) ஒப்பந்த நடைமுறையில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக வெளியிட்ட காணொலியில் செளரவ் பரத்வாஜ் தெரிவித்திருப்பதாவது: தில்லி அரசு இந்த நுரையைக் கட்டுப்படுத்த அதன் மீது வேதிப்பொருள்களை விரைவில் தெளிக்கத் தொடங்கும். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தபோது, தற்போதைய நீா்வளத்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், இதே செயலை நச்சுத்தன்மை வாய்ந்தது. ஒப்பந்த நடைமுறை தொடங்குவதற்கு முன்பே, ஒரு நிறுவனம் நுரையை நீக்கும் பணிக்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டது. இது விதிமுறை மீறல் மட்டுமல்ல; பா்வேஷ் சாஹிப் சிங் வகிக்கும் துறையில் நடந்துள்ள முறைகேடு என்று செளரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.

Summary

Toxic foams have started floating in the Yamuna again

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.