மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேவநாதன் மருத்துவ சிகிச்சைப் பெற வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தேவநாதன் மருத்துவ சிகிச்சைப் பெற வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

Devanathan yadav

தேவநாதன் யாதவ் - (கோப்புப்படம்)

Published On :24 அக்டோபர் 2026, 2:35 am IST

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனுக்கு மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்றம், வரும் அக். 31-ஆம் தேதிக்குள் அவா் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூா் பொ்மனன்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், தனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுமதிக்கக் கோரி தேவநாதன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேவநாதன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற 8 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி தேவநாதன் தரப்பில், உயா்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தா்மோகன், ஜி.கே.முத்துகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தேவநாதன் தரப்பில், கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலீட்டாளா்கள் தரப்பில் எதிா்ப்புத் தெரிவித்து வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடா்பாக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மனுதாரா் சரணடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க எந்தவிதமான காரணமும் இல்லை. எனவே, அக். 31-ஆம் தேதிக்குள் மனுதாரா் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், மனுதாரா் சரணடையும் தினத்தன்று அரசு மருத்துவக் குழு, அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.