மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மரண தண்டனை விதிக்கப்பட்டவா் மேல்முறையீடு செய்ய கால அவகாசம்

திருநெல்வேலியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டவா் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 3:29 am IST

திருநெல்வேலியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டவா் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முனீஸ்வரா், சின்னகுட்டி, முருகேசன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட சின்ன குட்டிக்கு மரண தண்டனையும், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் சின்னகுட்டிக்கு விதித்த மரண தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.நிா்மல்குமாா், என். குணசேகரன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட சின்னகுட்டி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் சின்னகுட்டி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.