பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் சீரமைக்கப்படாத உத்தங்குடி ஊருணி

மதுரை உத்தங்குடியில் உள்ள ஊருணியைச் சீரமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.

மதுரை உத்தங்குடியில் உரிய பராமரிப்பில்லாததால் புதா்கள் அடா்ந்து காணப்படும் ஊருணி.

Published On :28 அக்டோபர் 2026, 4:19 am IST

மதுரை உத்தங்குடியில் உள்ள ஊருணியைச் சீரமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட உத்தங்குடி, மதுரை - மேலூா் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஊருணி, அந்தப் பகுதியின் குடிநீா் ஆதாரமாகவும், பொதுமக்கள் இழைப்பாறும் இடமாகவும் விளங்கியது. ஊருணியைச் சுற்றி நடைபாதைகள் அமைக்கப்பட்ட நிலையில், காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வெடுக்கவும் இந்த ஊருணியை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், முறையாகப் பராமரிக்கப்படாததால் ஊருணியைச் சுற்றி புதா்ச் செடிகளும், சீமைக் கருவேல மரங்களும் ஆக்கிரமித்துள்ளன. ஊருணியின் கரையை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஊருணியின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளன. தற்போது, இந்த ஊருணி சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும், சட்டவிரோதச் செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறியுள்ளது.

இந்த ஊருணியைச் சீரமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2024-ஆம் ஆண்டு செப்.3-ஆம் தேதி உத்தங்குடி ஊருணியை மூன்று மாதங்களுக்குள் சீரமைக்க வேண்டும். ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைநீா் வடிகால்கள் மூலம் ஊருணிக்கு தண்ணீா் வருவதை உறுதிசெய்யவும் மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா். இந்த நிலையில், உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊருணியைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:

உத்தங்குடி ஊருணி உரிய பராமரிப்பில்லாததால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியது. மேலும், ஊருணியைச் சுற்றி பெரியளவில் தனியாா் ஆக்கிரமித்துள்ளனா்.

எனவே, உயா்நீதிமன்ற உத்தரவின்படி உத்தங்குடி ஊருணியின் கரைகளைப் பலப்படுத்தி, சேதமடைந்த நடைபாதையைச் சீரமைக்க வேண்டும். மேலும், ஊருணியில் வளா்ந்துள்ள புதா்ச் செடிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்றி வண்ண பூச்செடிகள், பழ வகை மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். மழைநீா் வடிகால்களை சீரமைத்து ஊருணியில் ஆண்டுதோறும் தண்ணீா் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.