மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4 மாதங்களில் அதிகரிப்பு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

நெல்லையில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பற்றி...

DMK MP Kanimozhi alleges rise in law and order issues in Tamil Nadu

கனிமொழி எம்.பி.

Published On :23 அக்டோபர் 2026, 4:25 pm IST

கடந்த 4 மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பகுதியில் வீடு புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டி சிறுமிகளைச் கடத்தி சென்ற விவகாரத்தில் படுக்காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது மகனை தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நடந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தை என்றும் பார்க்காமல் கொடுமையான முறையில் வெட்டி காயப்படுத்தி உள்ளனர். ஒரே நாளில் 4 சம்பவங்கள் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நாள்தோறும் இதே போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குழந்தைகள் தாக்கப்படும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. பெண்கள் வாழ்வதே கேள்விக்குறியான நிலை உள்ளது. அச்சத்தோடு பெண்கள் வாழும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வீடு புகுந்து பெண் என்றும் பாராமல் வெட்டக்கூடிய துணிச்சல் மிகுந்த சம்பவம் நடந்துள்ளது.

சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ள முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் கடந்த 4 மாதங்களில் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Summary

MP Kanimozhi stated that incidents of crime against women have risen over the past four months.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.