மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை? - கனிமொழி கேள்வி

பெண்களுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என வீரவசனம் பேசுபவர்களின் அவல ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களே சாட்சி என கனிமொழி கூறியிருப்பது....

Kanimozhi asks ...

கனிமொழி எம்.பி. - கோப்புப்படம்

Published On :23 அக்டோபர் 2026, 2:32 pm IST

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்ட நிலையில், என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை? என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில்,

பெண்களுக்கு எதிரான குற்றங்களே சாட்சி

வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது; புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளும் வீட்டில் கோபித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில் இந்தக் கொடூரம் நடந்துள்ளது.

இத்தகைய குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இந்த அரசு காட்டும் மெத்தனத்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை நடத்தப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. தமிழ்நாட்டு பெண்களுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என வீரவசனம் பேசுபவர்களின் அவல ஆட்சிக்கு அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றங்களே சாட்சி.

இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும்.

கொலைக்களமான தூத்துக்குடி மாவட்டம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இளைஞர் கல்லால் தாக்கிக் கொலை; தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை; திருவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகே காவலாளிக்கு அரிவாள் வெட்டு என தூத்துக்குடி மாவட்டமே தவெக ஆட்சியில் கொலைக்களமாக மாறிவிட்டது.

எந்தவித பொறுப்புணர்வுமின்றி ஆட்சியிலிருக்கும் தவெக அரசு, எத்தனை உயிர்ப்போனாலும் நடவடிக்கை எடுக்காது என்ற தைரியத்தில் தானே இதுபோன்ற கொலை குற்றங்கள் தொடர்கின்றன! முதல்வர் விஜய், மக்கள் மீது கருணைகாட்டி எதேனும் வேலைப்பார்க்க தெரிந்தவரிடம் காவல்துறையை ஒப்படைக்க வேண்டும்.

என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை?

சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிறப் பெண் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை?

தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

What is the Reels government's cinematic task force doing? - Kanimozhi Question

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.