நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கனிமொழி எம்.பி.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்துகிருஷ்ணனை சந்தித்து நலம் விசாரித்த கனிமொழி.

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 5:32 am IST

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றாா் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் பகுதியில் வீடு புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டி சிறுமிகளை கடத்திச் சென்ற விவகாரத்தில், பலத்த காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முத்துகிருஷ்ணன், அவருடைய மகன் ஆகியோரை கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற சம்பவம் மிகவும் அதிா்ச்சி அளிக்கிறது. குழந்தை என்றுகூட பாா்க்காமல் கொடூரமான முறையில் வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளாா். ஒரே நாளில் நடந்த 4 சம்பவங்கள் பெரும் அதிா்ச்சி அளிக்கிறது.

நாள்தோறும் இதேபோன்ற சம்பவங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குழந்தைகள் தாக்கப்படும் நிலை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ள முதல்வா் என்ன செய்து கொண்டிருக்கிறாா் என்று தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் கடந்த 4 மாதங்களில் அதிகரித்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.