மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்சோ வீரமணி உள்பட 4 பேரை மீண்டும் காவலில் விசாரிக்க எஸ்ஐடி மனு

போக்சோ வீரமணி உள்பட 4 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு மனு அளித்தது குறித்து...

Veeramani

வீரமணி - கோப்புப்படம்

Published On :22 அக்டோபர் 2026, 8:52 pm IST

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் வீரமணி உள்பட 4 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு மனு அளித்துள்ளனர்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி, அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன், மேலாளர் சக்திவேல், காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு, ஆகியோா் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இந்த விவகாரம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை செய்கின்றனா்.

ஏற்கெனவே அக். 15 முதல் 17 ஆம் தேதி வரையில் இரு நாள்கள் வீரமணியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மீண்டும் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகிய நால்வரையும் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனு அளித்துள்ளது.

நால்வரிடமும் பணப் பரிவர்த்தனை குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, விசாரணை என்ற பெயரில் வீரமணியை சிறப்புப் புலனாய்வுக் குழு துன்புறுத்துவதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வீரமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

SIT petitions to re-arrest 4 people including POCSO Veeramani for questioning

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.