கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இபிஎஸ் மீது அவதூறு! அதிமுகவுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர முடியாது: மன்னிப்புகோர நிர்மல் குமார் மறுப்பு

எடப்பாடி பழனிசாமி குறித்த அவதூறு கருத்துக்காக மன்னிப்பு கோர முடியாது என அமைச்சர் நிர்மல் குமார் மறுத்தது குறித்து...

Edappadi Palaniswami | Nirmal Kumar

எடப்பாடி பழனிசாமி | நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 6:42 pm IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த அவதூறு கருத்துக்காக மன்னிப்பு கோர முடியாது என அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அதிமுகவின் சொத்துகளை அபகரிப்பதாகவும், கட்சியை லெட்டர் பேட் கட்சியாகவும் மாற்றி விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டிப் பேசினார். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி மீதும், கட்சியின் மீதும் அவதூறு பரப்பியதாகக் கூறி, நிர்மல் குமார் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும், ரூ. 1 கோடி இழப்பீடு வேண்டும் என்றும் அதிமுக நோட்டீஸ் அனுப்பியது.

அதிமுகவின் நோட்டீஸுக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், "அதிமுகவில் தலைமைப் பிரச்னை இருப்பதாக பொது ஆவணங்களே கூறுகின்றன. கட்சியின் தலைவரை விமர்சித்தால், அது கட்சியின் மீதான அவதூறு ஆகாது. அவர் தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பவில்லை. கட்சியின் வாயிலாக நோட்டீஸ் அனுப்பியதால், நோட்டீஸுக்கு பதிலளிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக கோரியபடி பகிரங்க மன்னிப்பும் கேட்க முடியாது, ரூ. 1 கோடி இழப்பீடும் வழங்க முடியாது என்றும் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Summary

Defamation against Edappadi Palaniswami: Minister Nirmal Kumar refuses to apologize

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.