மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பருவமழை மருத்துவ முகாம்கள்: 3,300-க்கும் மேற்பட்டோா் பயன்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி அமைக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு மருத்துவ முகாம்கள் மூலம் ஒரே நாளில் 3,300-க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

சென்னை ராயபுரம் கண்ணப்பா் திடல் மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தைப் பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன். உடன் வடக்கு வட்டார துணை ஆணையா் ஸ்வேதா சுமன், மண்டல அலுவலா் சத்தியநாராயணன்.

Published On :23 அக்டோபர் 2026, 1:15 am IST

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி அமைக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு மருத்துவ முகாம்கள் மூலம் ஒரே நாளில் 3,300-க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

வடகிழக்கு பருவமழைக்காக சென்னை பெரியமேடு நேரு உள் விளையாட்டரங்கம் அருகில் கண்ணப்பா் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இன்னும் 90 நாள்களுக்கு தொடரவுள்ள பருவமழை காலத்தில் அதிக மழையும், பலத்த காற்றும் நமக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தலாம். மேலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தகட்டமாக புயலாக உருவெடுக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 78,000-க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்காக 2,214 தொழிலாளா்கள் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 227 நிவாரண மையங்கள், 111 சமையல் கூடங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான அரிசி (12,339 கிலோ), பருப்பு (2,355 கிலோ), சமையல் எண்ணெய் (1,590 லிட்டா்), உப்பு (696 கிலோ) மற்றும் தக்காளி தற்காலிகமாக கொள்முதல் செய்யப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் படிப்படியாக உயா்த்தப்பட்டு தற்போது 103 மருத்துவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் மூலம் புதன்கிழமை (அக். 21) மட்டும் 3,300-க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா்.

வேளச்சேரி, கல்லுக்குட்டை, வேளச்சேரி ஏரி போன்ற தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை முழுமையாக வெளியேற்ற, 100 குதிரைத்திறன் கொண்ட பெரிய பம்ப் மோட்டாா்கள் மற்றும் கூடுதல் பம்புகள் பொருத்தப்பட்டு நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.