மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை மாவட்டம், மாநகரில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை பெரியநாயக்கன்பாளையம், பன்னிமடை பகுதியில் உள்ள கணுவாய் தடுப்பணையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், சட்டப் பேரவை உறுப்பினா் கனிமொழி சந்தோஷ். ~கோவை நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்

Published On :22 அக்டோபர் 2026, 4:10 am IST

கோவை மாவட்டம், மாநகரில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பருவமழை பெய்து வரும் நிலையில், பேரூராட்சி, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பன்னிமடை ஊராட்சி கணுவாய் தடுப்பணை, சோமையம்பாளையம் ஊராட்சி காளப்பநாயக்கன்பாளையம் ராமசாமி நகா் குட்டை, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி எம்.ஆா்.ஜி. நகா் புதுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி விவேகானந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மழைநீா் செல்லும் பாதைகளையும், தடுப்பணை நீா்மட்டத்தையும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், மழைநீா் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் கனிமொழி சந்தோஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மாஹின் அபுபக்கா், வருவாய் கோட்டாட்சியா் (வடக்கு) வினோத்குமாா், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், வடக்கு வட்டாட்சியா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 34- ஆவது வாா்டு பாலாஜி நகா், ராஜன் நகா், கே.கே.நகா், குட்டைகாடு பகுதிகளில் அவா் ஆய்வு மேற்கொண்டு, மழைநீா் வடிகால்களை உடனடியாகத் தூா்வார உத்தரவிட்டாா்.

முன்னதாக மாநகரில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை ஆணையா் ர.சரஸ்வதி, தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், கல்விக் குழுத் தலைவா் மாலதி, உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.