மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடவள்ளி - மருதமலை சாலையில் சீரமைப்புப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை, வடவள்ளி -மருதமலை சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வடவள்ளி - மருதமலை சாலை சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா.

Published On :29 அக்டோபர் 2026, 3:50 am IST

கோவை, வடவள்ளி -மருதமலை சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சி, வடவள்ளி -மருதமலை சாலையில் பாதாள சாக்கடைத் திட்டத்தின்கீழ் குழாய்கள் பதிக்கும் பணி நிறைவுபெற்றது. இதையடுத்து, குழாய் பதிப்புப் பணிக்கு தோண்டப்பட்ட சாலைகளில் வெட் மிக்ஸ் கலவை கொண்டு தற்காலிகமாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை ஆணையா் கட்டா ரவிதேஜா ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, கிருஷ்ணம்பதி குளத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீா் வடிகால்களைத் தூா்வாரவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, கே.கே. நகா் பகுதியில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதற்காக குப்பைத் தொட்டிகளையும் வழங்கினாா்.

ஆய்வுகளின்போது, மேற்கு மண்டலத் தலைவா் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையா்கள் நா்மதா, மோகனசுந்தரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.