கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்!

சென்னையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என பிரதீப் ஜான் பதிவு...

chennai rains

மழை - ANI

Published On :20 அக்டோபர் 2026, 9:51 am IST

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று தமிழ்நாடு அரசின் எல்-நினோ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து பிரதீப் ஜான் இன்று வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”விடுமுறை முடிந்து சென்னை திரும்புபவர்களுக்கு மழையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்படுகிறது. வட சென்னையில் தற்போது தொடங்கியுள்ள நல்ல மழைப்பொழிவானது, சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் பரவும்.

இன்று முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் திடீர் மழையாக குறுகிய நேரத்திற்குத் தீவிரமாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைவெளியில் வெய்யில் காணப்படும். மாலையிலிருந்து இரவு வரை மழையின் தீவிரம் அதிகரித்து, அதிகாலை வரை தொடர வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவரமடையும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Northeast monsoon will intensify in Chennai from today!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.