மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தென் மாவட்டங்களில் பலத்த மழை! குமரியில் 146 மி.மீ. பதிவு!

கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசத்தில் அதிகபட்ச மழை பதிவானது பற்றி...

rain

மழை - பிரதிப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 11:18 am IST

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசத்தில் 146 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்த நிலையில், புதன்கிழமை மாலை முதல் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்தமிழக கடலோர மாவட்டங்களில் விடியவிடிய பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அக். 21 காலை 8.30 மணி முதல் அக். 22 காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசத்தில் 146 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

இதேபோல், நெல்லை மாவட்டம் ஊத்துவில் 128 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 117 மி.மீ., காயல்பட்டினத்தில் 115 மி.மீ., கிருஷ்ணகிரி செங்கத்தில் 112 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் பெரியளவிலான மழை எங்கும் பதிவாகவில்லை. மாமல்லபுரம் சுற்றியுள்ள கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலும், திருவள்ளூரில் பொன்னேரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்தது.

Summary

Heavy rain in southern districts! 146 mm recorded in Kumari!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.