தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு!

சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 129 மி.மீ. பதிவாகியிருப்பது பற்றி...

chennai rain

சென்னையில் விடியவிடிய மழை - Dinamani

Published On :21 அக்டோபர் 2026, 9:50 am IST

தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடியவிடிய பரவலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அக். 20 காலை 8.30 மணி முதல் அக். 21 காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதேபோல், சென்னை நுங்கம்பாக்கத்தில் 112 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை ஏரிகளின் நீர் கொள்ளளவு 5 டி.எம்.சி.யை தாண்டியுள்ளது. புழல் ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் நீரின் கொள்ளளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Rain in Chennai since dawn! 129 mm recorded in Meenambakkam!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.