தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கனமழை எச்சரிக்கை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை எச்சரிக்கையாக, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு குறித்து....

 Schools in 5 districts of Tamil Nadu to remain closed today

கனமழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. - கோப்புப்படம்

Published On :22 அக்டோபர் 2026, 8:56 am IST

கனமழை எச்சரிக்கையாக, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை(அக்.22) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) புதன்கிழமை காலை 5 மணி அளவில் உருவானது. இந்தப் புயல் சின்னம் வலு குறைவாக உள்ளது. இது, மேலும் வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் தற்போது இல்லை.

எனினும், வியாழக்கிழமை (அக். 22) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு (105 மி.மீ. - 204 மி.மீ.) வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென் மாவடங்களில் பல இடங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை(அக்.22) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே, கன்னியாகுமரி- கேரளம் எல்லைப் பகுதியில் உள்ள நெய்யாற்றின் கரை பாறசாலை இடையே ரயில் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த வழித்தடத்தில் ரயில்கள் சேவை தாமதமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Heavy rain warning: Schools in 5 districts of Tamil Nadu to remain closed today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.