மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறித்து...

Heavy rain in Tenkasi: Bathing prohibited at courtallam Main Falls

குற்றாலம் பிரதான அருவி - ENS

Published On :22 அக்டோபர் 2026, 11:28 am IST

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று (அக். 22) தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் குற்றால அருவிகளில் இன்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அருவிகளில் நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Flooding at Courtallam Falls: Tourists banned from bathing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.