குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

floods at coimbatore  Kutralam Falls

குற்றாலம் அருவி - DIN

Published On :23 அக்டோபர் 2026, 5:20 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

புலியருவியில் வியாழக்கிழமை பிற்பகலில் நீா்வரத்து குறைந்ததையடுத்து, அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் புலியருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.