மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மழைக்கால நோய்த் தடுப்புக்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: இந்திய கம்யூ.

மழைக்கால நோய்த் தடுப்புக்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது குறித்து...

cpi

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப்படம்

Published On :21 அக்டோபர் 2026, 7:21 pm IST

மழைக்கால நோய்த் தடுப்புக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் புதன்கிழமை (அக். 21) வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடங்களுக்கான செய்தி.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவ சேவை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய மருத்துகளையும் போதிய அளவில் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிவுறுத்தல்கள் நடைமுறை படுத்தப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

அரசு மருத்துமனைகளைப் போன்று தனியார் மருத்துவமனைகளும் நோயாளிகளுக்கு தடையற்ற சிகிச்சை வழங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். அதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் போதிய அளவில் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு எக்காரணம் கொண்டும் சிகிச்சை வழங்க மறுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அமைச்சர் அருண்ராஜ் அவர்களும், தமிழ்நாடு அரசும் வழங்கிட வேண்டும்.

டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. கட்டணக் கொள்ளையில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையும் அரசு விடுக்க வேண்டும். மீறும் மருத்துவமனைகள் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று மு. வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Communist Party of India State Secretary M. Veerapandian on Wednesday (Oct. 21) stressed the need to ensure arrangements for the prevention of monsoon diseases.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.