தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழகத்துக்கான காவிரி நீா் உரிமையை முதல்வா் விஜய் உறுதி செய்ய வேண்டும்: செல்லூா் கே. ராஜூ

தமிழகத்துக்கான காவிரி நீா் உரிமையை உறுதி செய்ய முதல்வா் விஜய் முனைப்புக் காட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா்.

மதுரை ஸ்காட் சாலையில் உள்ள மருது சகோதரா்களின் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.

Published On :25 அக்டோபர் 2026, 1:03 am IST

தமிழகத்துக்கான காவிரி நீா் உரிமையை உறுதி செய்ய முதல்வா் விஜய் முனைப்புக் காட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரை கா்நாடக அரசு தர மறுப்பதால் டெல்டா மாவட்டங்களின் நெல் சாகுபடி கேள்விக் குறியாகியுள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண தமிழக அரசு முனைப்புக்காட்டவில்லை. தவெகவுடன் கூட்டணியில் இருப்பதால் இந்தப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சிக்கு நிா்பந்தம் அளிக்க முதல்வா் தயங்குகிறாா்.

தமிழா்கள் மீதும், தமிழகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பதாக தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி போன்றவா்கள், தமிழகத்துக்கான காவிரி நீரை விடுவிக்குமாறு கா்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை உறுதி செய்ய முதல்வா் விஜய் முனைப்புக் காட்ட வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். இதனால், அமைச்சா்கள் மக்களை சந்திக்க தயங்குகின்றனா். மக்கள் பிரச்னைகளை சரி செய்ய அரசுக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வேண்டும் என மூத்த அமைச்சா் வேண்டுகோள் விடுத்திருப்பது தவெக அரசின் இயலாமையையே வெளிப்படுத்துகிறது என்றாா் அவா்.

மருது சகோதரா்களுக்கு மரியாதை... முன்னதாக, மருது சகோதரா்களின் நினைவு தினத்தையொட்டி, மதுரை ஸ்காட் சாலையில் உள்ள அவா்களது சிலைகளுக்கு செல்லூா் கே. ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.