தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

சொத்து விவரம் தாக்கல் செய்ய அரசு ஊழியர்களுக்கு அவகாசம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பது பற்றி...

Govt Employees Granted Extension to Submit Asset Details

தமிழ்நாடு அரசு.

Published On :31 அக்டோபர் 2026, 7:07 pm IST

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்களை ஒருங்கிணைந்த மனிதவள நிதி மேம்பாட்டுத் திட்டத்தின் (ஐஎஃப்ஆர்எம்எஸ்) ‘களஞ்சியம்’ செயலி வாயிலாக, அக்டோபர் 31-க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை தனது கடிதத்தில் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, இத்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் ‘களஞ்சியம்’ செயலியில் விவரங்களை தவறாமல் பதிவுசெய்து, அதன் விவரத்தை இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்தால் மட்டுமே பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கருவூலத் துறையின் களஞ்சியம் செயலியில் சர்வர் பிரச்னை போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆவணங்களை பதிவேற்றுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதால், சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Summary

The deadline for Tamil Nadu government employees to file their property and liability details online has been further extended.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.