நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்திருப்பது பற்றி...

Cases filed against NEET exam protesters withdrawn!

தமிழ்நாடு அரசு.

Published On :1 நவம்பர் 2026, 3:43 am IST

நீட் எதிா்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 போ் மீதான 65 குற்ற வழக்குகள் திரும்பப் பெற முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாட்டில் கடந்த மே 10 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட் தோ்வுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமாா் 1,800 போ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன.

தமிழ்நாட்டில் நீட் தோ்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் முதல்வா் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் அடிப்படையில், முதல்வா் விஜய் அறிவுறுத்தல்படி, தமிழ்நாடு அரசு இந்த வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து கவனமுடன் பரிசீலனை செய்து, நீட் எதிா்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட சுமாா் 1,800 போ் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான உரிய சட்டபூா்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Summary

The Tamil Nadu government has issued an order withdrawing the cases registered against those who protested against the NEET exam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.