மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திமுகவினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்கு தோல்விதான் பரிசு: அமைச்சர் கீர்த்தனா

இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுகவுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள் என அமைச்சர் கீர்த்தனா கூறியிருப்பது...

Minister Keerthana

அமைச்சர் கீர்த்தனா - எக்ஸ்

Published On :19 அக்டோபர் 2026, 5:15 pm IST

திமுகவினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுகவுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள் என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள்.

திமுகவினருக்கு வாடிக்கை

நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு, நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர்.

அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார்.

மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.

எந்த வகையான அரசியல் பண்பாடு?

'"தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?"

ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது.

கனிமொழி எம்.பி அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா?

இந்த கள்ள மௌனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக டிஎன்ஏ கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா?

தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்

தமிழ்நாட்டு மக்கள், திமுகவினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுகவுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

DMK's obscene and indecent speech is rewarded with defeat: Minister Keerthana

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.