மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருப்பதியில் அணிந்திருந்த நெக்லஸ் ரூ.3 கோடியா? அமைச்சர் கீர்த்தனா சொன்ன உண்மை

திருப்பதியில் அணிந்திருந்த நெக்லஸ் ரூ.3 கோடியா என்பது குறித்து அமைச்சர் கீர்த்தனா கொடுத்த விளக்கம்

Minister S Keerthana

அமைச்சர் கீர்த்தனா - TN DIPR

Published On :29 அக்டோபர் 2026, 11:59 am IST

அண்மையில் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அணிந்திருந்த நெக்லஸ் பேசுபொருளாகியிருந்த நிலையில், அது பற்றி அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றபோது, தொழில்துறை அமைச்சராக பதவியேற்றவர் கீர்த்தனா. பல்வேறு காரணங்களால், இவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் கடும் விமர்சனங்களைப் பெற்று வந்தது.

அரசுப் பள்ளிக்குள் நுழைந்து மாணவியை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு, அதனை விடியோ எடுத்து வெளியிட்டு பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தார்.

அண்மையில், திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் கீர்த்தனா, கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. திமுக ஆட்சியில் தொடங்கிய திருத்தங்கல் ரயிலவே மேம்பாலப் பணிகளை தொடங்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி கமிஷன் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கீர்த்தனாவின் பெயரைச் சொல்லி சிலர் மிரட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டுக்கும் கீர்த்தனா அணிந்திருந்த நெக்லஸையும் சம்பந்தப்படுத்தி, அந்த தங்கக் காசு மாலை ரூ.3 கோடியில் வாங்கப்பட்டதா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் கீர்த்தனா, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் லஞ்சம் கேட்கவும் இல்லை, வாங்கவும் இல்லை, இனியும் ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை உண்மைகளாக்க முடியாது. நான் பதவியேற்றது முதலே, விமர்சனங்களும், சந்தேகக் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது. பொது வாழ்வில் இது சாதாரணம் என்றாலும் ஊழல் குற்றச்சாட்டை விமர்சனமாக எடுத்துக் கொள்ள முடியாது.

என் நேர்மை, மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கண்டிக்கிறேன்.

எனக்கு ரூ.4 கோடி மதிப்பிலான வீடு இருக்கிறது என்றார்கள், பிறகு அது ரூ.10 கோடி என மாற்றினார்கள். திருப்பதியில் தங்க காசு மாலை அணிந்திருந்ததாகவும், அதற்கும் மேம்பால லஞ்சப் பணம் ரூ.3 கோடியையும் தொடர்புபடுத்தினார்கள்.

நான் திருப்பதி சென்றபோது அணிந்திருந்தது வெறும் பேஷன் நெக்லஸ்தான், அது தங்கமாக சித்தரிக்கப்பட்டது, இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்து என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, இனியும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொறுத்துக் கொள்ள மாட்டேன், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Was the necklace worn in Tirupati worth Rs. 3 crore? Minister Keerthana reveals the truth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.