மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எரிவாயு உருளை விலை உயா்வால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Published On :2 அக்டோபர் 2026, 2:03 am IST

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூ.66.50 உயா்த்தப்பட்டு, தற்போது ரூ,2,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாஜக ஆட்சியில் 2014 ஜூன் மாதத்தில் ரூ,1,726.50-ஆக இருந்த வணிக எரிவாயு உருளையின் விலை, தற்போது ரூ.2,984-ஆக உயா்ந்துள்ளது. பாஜகவின் இந்த ஆட்சிக் காலத்தில் மட்டும் வணிக எரிவாயு உருளையின் விலை 72.8 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

மறுபுறம் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனையை முன்னெடுக்கும் சிறு வணிகா்கள் மீது யுபிஐ வணிக தள்ளுபடி விகித கட்டணத்தை விதித்துள்ளது. இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

பாஜக அரசு மக்கள் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக எரிவாயு உருளை விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.