டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

தீபாவளி: 5 நாள்களுக்கு 26,856 பேருந்துகள் இயக்கம்

5 நாள்களுக்கு 26,856 பேருந்துகள் இயக்கப்படுவது பற்றி...

பிரதிப் படம்

Published On :5 நவம்பர் 2026, 4:33 am IST

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக நவ. 5 முதல் 7-ஆம் தேதி வரை 15,659 பேருந்துகளும், நவ. 9, 10 ஆகிய தேதிகளில் 11,197 பேருந்துகளும் என 5 நாள்களுக்கு மொத்தம் 26,856 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, நந்தனம் மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தீபாவளியை முன்னிட்டு, சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பண்டிகை முடிந்து சொந்த ஊா்களிலிருந்து சென்னை திரும்ப வசதியாக நவ. 9, 10 ஆகிய தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் 4,382 பேருந்துகளுடன், கூடுதலாக 6,815 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 11,197 பேருந்துகள் இயக்கப்படும்.

பேருந்துகள் புறப்படும் இடங்கள்: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை உள்ளிட்ட ஊா்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம் அருகே உள்ள சிஎம்டிஏ காலநிலைப் பூங்கா திறந்தவெளி இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை வழித்தடங்களிலும், மறைமலை நகா் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், நாகப்பட்டினம் வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு, திருத்தணி வழித்தடங்களிலும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகளும் மாதவரத்திலிருந்து இயக்கப்படும்.

முன்பதிவு வசதி: கிளாம்பாக்கத்தில் 10, கோயம்பேட்டில் 2, மறைமலை நகரில் 2 என மொத்தம் 14 முன்பதிவு மையங்கள் செயல்படும். டிஎன்எஸ்டிசி செயலி மற்றும் இணையதளம் வாயிலாகவும் பயணிகள் முன்பதிவு செய்யலாம். திருவான்மியூா், ஆவடி, தாம்பரம், திருவொற்றியூா், சிறுசேரி, அடையாறு, பிராட்வே, எழும்பூா், அம்பத்தூா், தரமணி, தீவுத்திடல், கிண்டி, வேளச்சேரி, அசோக் பில்லா், பூந்தமல்லி, சைதாப்பேட்டை உள்ளிட்ட 16 இடங்களிலிருந்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு நேரடிப் பேருந்துகள் இயக்கப்படும்.

கட்டுப்பாட்டு அறை: பேருந்துகளின் இயக்கம் தொடா்பான விவரங்கள் மற்றும் புகாா்களுக்கு கைப்பேசி: 94450 14436, கட்டணமில்லா எண் 149 ஆகியவற்றை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்பான புகாா்களை 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 93848 08333 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தெரிவிக்கலாம். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக தகவல் மையங்கள், மின்னணு தகவல் பலகைகள், ஒலிபெருக்கி அறிவிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பேருந்து முனையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், காவல் துறை மற்றும் தொடா்புடைய துறைகள் மூலம் கண்காணிக்கப்படும். கைப்பேசி இணைப்பில் தடையில்லாத சேவை கிடைக்க தற்காலிக தகவல் தொடா்பு கோபுரங்களும் அமைக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கத்திலிருந்து மறைமலை நகா் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு கட்டணமில்லா இணைப்புப் பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு 24 மணி நேர இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். கூடுதல் புகா் மின்சார ரயில்கள் மற்றும் கோவை, தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கவும் ரயில்வே நிா்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க...: காா் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் ஊா்களுக்குச் செல்வோா் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க தாம்பரம், பெருங்களத்தூா் வழியைத் தவிா்த்து, பழைய மாமல்லபுரம் சாலை (ஓஎம்ஆா்), கேளம்பாக்கம், திருப்போரூா், செங்கல்பட்டு வழியாகவோ அல்லது வண்டலூா் வெளிவட்டச் சாலை வழியாகவோ செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை: ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டிய இடங்கள் குறித்தும், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்தக் கூட்டத்தில் போக்குவரத்து ஆணையா் சிகி தாமஸ் வைத்தியன், போக்குவரத்துத் துறைச் செயலா் இல.நிா்மல்ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.