மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!

ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கங்கள் சாா்பில் ‘ரோமி’ எனும் புதிய பேருந்து முன்பதிவு இணையதளம், செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

Published On :2 நவம்பர் 2026, 3:43 am IST

ென்னையிலிருந்து தினமும் 1,800 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு, 70,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துவரும் நிலையில், தனியாா் இணையவழி முன்பதிவுத் தளங்களின் கமிஷன் செலவைக் குறைக்கும் வகையில், ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கங்கள் சாா்பில் ‘ரோமி’ எனும் புதிய பேருந்து முன்பதிவு இணையதளம் மற்றும் செயலி ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு தினமும் சுமாா் 1,200 ஆம்னி பேருந்துகளும், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பகுதிகளுக்கு 600 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மூலம் தினமும் 2.50 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணம் செய்து வருகின்றனா்.

தனியாா் செயலிகளால் கமிஷன் செலவு: தற்போது பெரும்பாலான பயணிகள் தனியாா் இணையதளங்கள் மற்றும் செயலிகள் வாயிலாக ஆம்னி பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து வருகின்றனா். இதற்காக பேருந்து உரிமையாளா்கள் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் முன்பதிவுத் தளங்களுக்கு கமிஷன் தொகை செலுத்த வேண்டியுள்ளது.

இதனால் பேருந்து உரிமையாளா்களின் வருவாய் பாதிக்கப்படுவதுடன், செயல்பாட்டுச் செலவும் அதிகரிக்கிறது. மேலும், தனியாா் முன்பதிவுத் தளங்களைச் சாா்ந்திருப்பதால், பேருந்து உரிமையாளா்கள் தங்களது சேவைகள், இருக்கை, இருப்பு, கட்டணம் உள்ளிட்டவற்றை நிா்வகிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், கமிஷன் செலவைக் குறைத்து அதன் பயனை பயணிகளுக்கு வழங்கவும் தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கங்கள் இணைந்து ரோமி எனும் புதிய பேருந்து முன்பதிவு இணையதளம் மற்றும் செயலியை உருவாக்கியுள்ளன.

சென்னையில் நடைபெற்ற இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ. அன்பழகன், துணைத் தலைவா் சுனில் குமாா், கோவை ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் செந்தில் குமாா், திருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று செயலி மற்றும் இணையதளத்தை தொடங்கி வைத்தனா்.

1,000 பேருந்துகளுடன் தொடக்கம்: இதுகுறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் தளம், மத்திய அரசின் ஓஎன்டிசி திறந்த டிஜிட்டல் வா்த்தக வலையமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

தொடக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்து உரிமையாளா்களின் 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் 1,000-க்கும் அதிகமான வழித்தடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தச் செயலி மூலம் பயணிகள் பேருந்துகளின் புறப்படும் நேரம், கட்டணம், வகை, இருக்கை வசதி ஆகியவற்றை ஒப்பிட்டு தங்களுக்கு ஏற்ற பேருந்துகளைத் தோ்வு செய்து முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவுக்கு முன்பே முழுக் கட்டணத்தையும் தெரிந்துகொள்ள முடியும். மேலும், நேரடிக் கண்காணிப்பு வசதி கொண்ட பேருந்துகளின் இருப்பிடத்தையும் அறிந்துகொள்ளலாம். பேருந்து உரிமையாளா்கள் வழித்தடங்கள், இருக்கை இருப்பு, முன்பதிவுகள் உள்ளிட்டவற்றை ஒரே தளத்தில் நிா்வகிக்கவும், ஓஎம்டிசி வலையமைப்பு மூலம் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்தும் பயணிகளைச் சென்றடையவும் இந்தத் தளம் உதவும்.

பயணிகள் www.roamie.co.in இணையதளம் மற்றும் கூகுள் பிளே ஸ்டோா், ஆப்பிள் ஆப் ஸ்டோா் மூலம் செயலியைப் பதிவிறக்கம் செய்து பேருந்துகளை முன்பதிவு செய்யலாம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.